பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது...!
பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது...! Space Science Information, ★ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று (பிப்.14) காலை விண்ணில் சீறிப் பாய்ந்தது. ★ இந்த 2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத் தப்பட்டது. வெற்றிகரமான நிலைநிறுத்தம்: ★ மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்து அனுப்பக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. ★ இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது. ★ இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், ”இஓஎஸ்-04 முதன்மை செயற்கைக்கோள் வெற்றிகரமாக துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ★ அத்துடன் அனுப்பப்பட்ட மற்ற செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ★ அடுத்த பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும்'' என்றார். ★ சோம்நாத் ...